அடுத்த 36 மணித்தியாலம் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலத்தில் மத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எள வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் வரையில் இலேசான மழையும் பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் சில இடங்களில் மதியம் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும். மேற்கு, சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது ஏற்படும் அபாயங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.