இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்ஜன்டீனா அணி உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டியில் வெற்றியீட்டியதை அடுத்து போட்டியாளர் ஒருவருக்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்த சமூக ஊடகமாக லயனல் மெஸ்ஸியின்(Lionel Messi) Instagram வலைத்தளம் சாதனை படைத்துள்ளது.
கிரிஸ்டியானோ ரோனால்டோ(Cristiano Ronaldo) மற்றும் லயனல் மெஸ்ஸி (Lionel Messi)ஆகிய இருவரும் பங்குபற்றும் வர்த்தக விளம்பரத்தை விட அதிக எண்ணிக்கையிலான பின்பற்றுனர்கள் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) Instagram பக்கத்தை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸுக்கு எதிராக ஆர்ஜன்டீனா பெற்ற வெற்றியின் பின்னர் லயனல் மெஸ்ஸி(Lionel Messi) தனது 10 நிழற்படங்களை இன்ஸ்டகிராமில் பதிவேற்றியதன் விளைவாக இந்த ஆதரவு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.