சிறுவர்களைக் கயிற்றில் கட்டி ஈவிரக்கமற்று தாக்குதல்; வெளியான காணொளியால் அதிர்ச்சி
ஊர் மக்கள் முன்னிலையில் 5 சிறுவர்களைக் கயிற்றினால் கட்டி, அவர்களைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஈவிரக்கமற்ற செயல் இந்தியாவின் பீகாரில் அரங்கேறியதாக கூறப்படுகின்றது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுவர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.
வேடிக்கை பார்த்த மக்கள்
அவர்கள் வலியால் கதறும் போது பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை எனவும் கூறப்படுகின்றது.
எனினும் இத்தாக்குதல் சம்பவம் எப்போது? எதற்காக இடம்பெற்றது? என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலையகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.