ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும்; நடிகை ஸ்ருதி ஹாசன்
ஆண்களுக்கும் மாதவிடாய் வரவேண்டும் - 1000 முறை பிரார்த்தித்திருக்கிறேன் என நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
தனக்கு PCOS (Polycystic Ovary Syndrome) பாதிப்பு இருப்பதால், மாதவிடாய் நாட்களில் கடுமையான வலியை அனுபவித்து வருவதாக நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
Podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஸ்ருதி ஹாசன், மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான சிரமங்கள் மற்றும் அதற்கான பணிச்சூழல் ஆதரவு குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆண்களுக்கும் மாதவிடாய் ஏற்பட்டால், அதற்கான அதிகாரபூர்வ விடுமுறை நடைமுறைக்கு வந்திருக்கும் என தான் பலமுறை பிரார்த்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அப்படி நடந்திருந்தால், வேலை ஒப்பந்தத்திலேயே மாதவிடாய் விடுமுறை இடம்பெற்றிருக்கும்” என ஸ்ருதி ஹாசன் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.