சு.க உறுப்பினரை மூர்க்கத்தனமாக தாக்கிய ஆளுங்கட்சி உறுப்பினர்
சு.க உறுப்பினர் பெரியசாமி பிரதீபன் இன்று காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் சபை அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது மஸ்கெலியா நகரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, ஆளுங்கட்சியின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தாக்கப்பட்டதாக உப தவிசாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் தனது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்குமிடையிலான மோதலையடுத்து, சபை அமர்வுகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.