இத்தாலி பிரதமர் மெலோனிக்கு மோடி கொடுத்த மெலடி மிட்டாய்! வைரலாகும் காணொளி
இத்தாலி நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை தலைநகர் ரோமில் சந்தித்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
அங்கு மெலோனியுடன் ஒரே காரில் பயணிப்பது, உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை பார்வையிடுவது என ரோம் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் மோடியுடன் காணொளி
இந்த சந்திப்பு வேளையில் இந்தியா - இத்தாலி நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அத்துடன் மெலோனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மோடியுடன் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் மோடி “மெலடி” மிட்டாய் பெக்கட்டை காட்டியபடி, “மெலடி” என்று கூறுகிறார்.
#WATCH | "Thank you for the gift", tweets Prime Minister of Italy, Giorgia Meloni
— Daily Excelsior (@DailyExcelsior1) May 20, 2026
She says, "Prime Minister Modi brought as a gift, a very, very good toffee- Melody"
(Video Source: Giorgia Meloni/'X') pic.twitter.com/GvoUUSMcQ8
அதற்கு மெலோனி, “பிரதமர் மோடி எங்களுக்கு ஒரு அருமையான மிட்டாய் பரிசாக கொண்டுவந்துள்ளார்” என்று கூறுவது போல் மெலோனி பதிவிட்டிருந்தார்.
இத்தாலி, இந்தியா ஆகிய இரு நாடுகளின் பிரதமர்களும் ரோம் நகரில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.