எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைகலப்பு; வீதியில் விழுந்து உருண்ட நபர்கள்!
நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் உரிமையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பானதில் வீதியில் உருண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் நிரப்ப வாகனங்கள் காத்திருந்த போது, டீசல் தீர்ந்துவிட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து உரிமையாளருக்கும் , வாடிக்கையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இறுதியில் பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தி, 3 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கெஸ்பேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





