பிரதமருக்கும் வைத்தியர்களுக்கும் இடையில் சந்திப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் தங்காலை தனியார் ஹோட்டலொன்றில் இடம்பெற்றது.
இதன்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வைத்தியர்கள் பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.
இதன்படி தங்காலை வைத்தியசாலையை மத்திய அரசுக்கு கையகப்படுத்தும் நடவடிக்கையை முறையான மற்றும் விரைவான வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் கவனம் செலுத்தினார்.
மேலும் குறித்த சந்திப்பில் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தீபிகா படபெந்திகே மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள், விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.