ஜனாதிபதி ரணில் - பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும் (Sarah Hulton) இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளது.
'இது தொடர்பில் டுவிட்டர் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர்,
இந்த கலந்துரையாடலில் போது பல விடயங்கள் தொடர்பில் விரிவான பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Wide-ranging discussion today with President @RW_UNP. Raised respect for human rights & due process in line with UNHRC. Looking forward to strengthening ??-?? relationship within a peaceful, democratic & inclusive space.
— Sarah Hulton OBE (@SarahHultonFCDO) July 28, 2022
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்பான செயல்முறை மற்றும் மனித உரிமைகளுக்கு இணங்குவது உட்பட பல விடயங்களில் கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இறுதியாக, அவர் தனது டுவிட்டர் பதிவில், அமைதியான மற்றும் ஜனநாயக இடத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.