உருளைக்கிழங்குச் சாறில் ஒளிந்துள்ள நன்மைகள்; எவ்வளவு தெரியுமா!
உருளைக் கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால் அது கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டது என்பதால் உடக் எடையை அதிகரிக்கும் என பல்லரும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையில் உருணைக்கிழங்கு ஆரோக்கியம் நிறைந்த உணவாகும்.
எந்த இயற்கை உணவும் உடலுக்குக் கெடுதல் அல்ல. அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே அதன் ஆரோக்கியம் அடங்கும் என ஊட்டச்சத்து நிபுணர் Luke Coutinho குறிப்பிட்டுள்ளார். பல பிரச்சனைகளை ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் நமக்கு நல்ல தீர்வு கிடைக்கும் எனவும் சொல்லப்படுகின்றது.
அவையாவன:-
வயிற்றுக் கோளாறு :
வாயுப் பிரச்னை, வயிற்றில் அதிக ஆசிட் உருவாக்கத்தால் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு குடித்தால் எல்லாம் பறந்துபோகும். மேலும் ஆய்வுகள் கூட உருளைக் கிழங்கு சாறு அல்சருக்கு நல்லது என பரிந்துரைக்கிறது.
கருவளையம் :
நுரையீரல் , சிறுநீரம் பாதிக்கப்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தும் விதமாக கண்களுக்குக் கீழ் கருவளையம் வரும் என்பார்கள். அந்த கருவளையத்தை சரி செய்ய உருளைக்கிழங்கு சாறு நல்ல மருந்து.
வைட்டமின் பி :
உருளைக்கிழங்கு வைட்டமின் B1, B2, B3 நிறைவாகக் கொண்டது. உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுவதுடன் மூளைக்கும் சுறுசுறுப்பு அளித்து சோர்வை தளர்த்தும்.
சரும அழகு :
கண்கள் வீக்கம், முகம் வீங்கியது போல் இருந்தால் உருளைக்கிழங்கு சாறை தடவி ஓய்வு எடுத்தால் போதும் சரியாகிவிடும் அல்லது ஒரு கிளாஸ் சாறை குடித்தால் இன்னும் நல்லது.
அலர்ஜி , சொரி ,சிரங்கிகை சரி செய்யும் :
கைகள் சொரி, சிரங்கால் அரிப்பு, அலர்ஜி ஏற்பட்டிருந்தால் அதன் மீது உருளைக்கிழங்கு சாறை தடவினால் அரிப்பு, எரிச்சல் நீங்கும்.
பொடுகு :
தலையில் பொடுகுத் தொல்லை இருந்தாலும் உருளைக்கிழங்கு சாறை தலை முடி வேரில் தடவினால் போய்விடும்.
மேலும் இவை தவிர பொட்டாசியம், ஸிங்க், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமி சி , இரும்பு போன்றவற்றைம் உருளைக்கிழங்கு கொண்டுள்ளது.