யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த முதல் மருத்துவ விமானம் !
இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு JIA மருத்துவ விமானம் முதல் முறையாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
யாழ் விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் , விமான நிலையத்திலிருந்து இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து சிறப்பு MEDEVAC விமானம்
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள பதிவில் ,
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் சமீபத்தில் இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து ஒரு சிறப்பு மருத்துவ வெளியேற்ற (MEDEVAC) சாசன விமானத்தை எளிதாக்கியது. இந்த பணி அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படும் இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றது.
சர்வதேச மருத்துவ நடவடிக்கைகளை ஆதரிப்பதிலும் எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பான, தடையற்ற பராமரிப்பை உறுதி செய்வதிலும் விமான நிலையத்தின் வளர்ந்து வரும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளது.



