கொரோனா கட்டுப்பாடு குழுவிலிருந்து வைத்திய நிபுணர் இராஜினாமா
கொரோனா கட்டுப்பாடு குறித்த மருத்துவக் குழுவிலிருந்து வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவதற்காக எடுக்கப்பட்ட சில முடிவுகளுடன் உடன்பட முடியாது என கூறி அவர் அக்குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக் குழுவின் அறிவுறுத்தலின் படி நாட்டை மூடுதல் மற்றும் தடுப்பூசி செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை என்றும் மற்ற காரணங்களால் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , எனவே எதிர்கால பேரழிவுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்றும் வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.