மே மாதம் 9 ஆம் திகதி; 857 சம்பவங்கள்; 1,083 பேருக்கு விளக்கமறியல்
கடந்த மே மாதம் 9 ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 857 சம்பவங்கள் தொடர்பில், 1,083 பேர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வன்முறை சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம். விபரமொன்றையும் வெளியிட்டுள்ளது.
அதனப்டி இன்று (12) காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைதுசெய்யப்பட்ட 22 பேரில், 08 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே.9 மற்றும் அதனை அண்மித்த நாட்களில் இடம்பெற்ற 857 வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,725 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களில் 1,083 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.