மத்தள விமான நிலையம் ; மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அனுர அரசாங்கம்!
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானம் நிலையத்தை விமானம் பழுதுபார்க்கும் நிலையமாக மாற்றுவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
38.5 பில்லியன் ரூபாய் நஷ்டம்
அதன்படி மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் பொருத்தமான வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்தில் மத்தள விமான நிலையம் 36.5 பில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் , கடந்த ஐந்து ஆண்டுகளில் 38.5 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற விரும்புகிறோம் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.