மாத்தறையில் சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களுடன் இருவர் கைது
மாத்தறை பகுதியில் அதிபயங்கர வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை-கந்தர பகுதியில் கல் சார்ந்த வேலைத்தளமொன்றை முன்னெடுக்கும் போர்வையில் மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் வெடிபொருட்களை வைத்திருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென்மாகாண விசேட சுற்றிவளைப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய, மாத்தறை-கந்தர பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 3,055 கிலோகிராம் நைட்ரேட் மற்றும் 672 ஜெலக்நைட் குச்சிகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.