இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்: வீட்டில் இரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளம் பெண்!
மாத்தறை - திக்வெலை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் வீட்டிலிருந்து இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றைய தினம் (24-07-2023) பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 22 வயதுடைய பி.எஸ்.சந்திரிகா என்ற இளம்ப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையான சந்திரிகா, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இன்றைய தினம் வேலைக்குச் செல்லாது வீட்டில் அவர் தங்கியிருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் வைத்தியசாலைக்குக் கிளினிக்குச் சென்ற பெற்றோர், பிற்பகல் 2 மணியளவில் வீட்டுக்கு வந்தவேளை மகள் தனது அறையில் இரத்தக் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளதைக் கண்டுள்ளனர்.
அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக திக்வெலை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் பெற்றோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பிரேத பரிசோதனையின் பின்னரே மரணம் தொடர்பில் உண்மையான தகவல் தெரியவரும் என்று திக்வெலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.