அவுஸ்திரேலியாவில் பிரபல சமையல் போட்டியில் சாதித்த இலங்கை பெண்!
பிரபல சமையல் போட்டியான "மாஸ்டர் செஃப்" அவுஸ்திரேலியா 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த போட்டி முழுவதும் சவிந்திரி பெரேரா இலங்கை உணவுகளை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வெற்றியின் பின்னர் சவிந்திரி பெரேரா நேற்றிரவு நாட்டை வந்தடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பிறந்த சவிந்திரி பெரேரா, தனது 18வது வயதில் அவுஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார். தற்போது 30 வயதாகும் அவர், தொழில் ரீதியாக வங்கி ஆலோசகராக உள்ளார்.
சிறுவயது முதலே இலங்கை உணவு தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் மாஸ்டர் செஃப் அவுஸ்திரேலியா போட்டியில் சாவிந்திரி கலந்து கொண்டார்.
அந்த போட்டியில், அவர் தனது தாயார் தயாரித்த சுவையான இலங்கை உணவு மற்றும் பானங்களை தயார் செய்திருந்தார்.
சிறப்பு என்னவென்றால், அவர் தயாரிக்கும் உணவில் வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை போன்ற உள்ளூர் மசாலாக்களை மிக துள்ளியமாக சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்க ஒன்று.