எரிபொருள் சேமிப்பால் ஏற்படும் பாரிய ஆபத்து
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் எரிபொருள் உள்ளிட்ட எரிபொருட்களை சேமித்து வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 4 பேர் எரிபொருள் தொடர்பான தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் கயான் ஏக்கனநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது வீடுகளில் எரிபொருளை சேமிப்பதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் தேங்காய் எண்ணெயை மாற்றியமைப்பதாலோ அல்லது தீ விபத்து ஏற்பட்டால் பெற்றோலைப் பயன்படுத்துவதனாலோ ஏற்படுகின்றன. இதனால், அண்மைய நாட்களில் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
எனவே வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் கயான் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.