மஸ்கெலியா சாமிமலை பகுதியில் மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
மஸ்கெலியா - சாமிமலை கவரவில்லை பகுதியில் குளவி கூடுகள் கலைந்து சென்ற வேளையில் வீதியில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்றையதினம் மதியம் 3.30.மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் ஒருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் கொட்டுக்கு இலக்கு ஆன ஒருவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறினார்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள், 48, 38, 42 வயதுடைய ஆண்கள் என மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பகுதி நேர வைத்திய அதிகாரி தெரிவித்தார்.