இலங்கையில் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
மஸ்கெலியாவில் உள்ள ஓயாவில் நீராட சென்ற பெண் ஒருவர் தடுக்கி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 52 வயதுடைய பாலன் தனலெட்சுமி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஸ்கெலியாவில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று முன்தினம் 12 மணியளவில் அத் தோட்டத்தில் உள்ள சாமிமலை உள்ள ஓயாவில் நீராட சென்ற உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
மேலும், உயிரிழந்த பெண் கடந்த 30 ஆண்டுகள் பிட் நோயால் பீடிக்கபட்டவர் எனவும் தடுத்து நீரில் விழுந்த போது அவருக்கு பிட் ஏற்பட்டுள்ளது என சட்ட வைத்தியர் தெரிவித்தார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பரிசோதனையின் பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபட்டது.