காதலியை கடத்திய திருமணமான கடற்படை சிப்பாய்
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் பிலியந்தலை பெலென்வத்த பகுதியில் நேற்று (15) இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம்
பெண்ணை கடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர் மதவாச்சி பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான கடற்படை சிப்பாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் பின்னர் அதனை 6 மாதங்களுக்கு முன் நிறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணுக்கு சந்தேக நபர் பல சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் கடத்தல் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.