மார்ச் மாத மகாபொல மாணவர்களில் வங்கிக் கணக்குகளில் வரவு
மார்ச் மாதத்திற்கான மகாபோலா கல்வி உதவித்தொகை தவணை இன்று (10) பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை லலித் அதுலத்முதலி மகாபோலா உயர் கல்வி உதவித்தொகை அறக்கட்டளை (MTF) தெரிவித்துள்ளது.

அதன்படி, தகுதியுள்ள மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 10,000 செலுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் முறையில் செய்யப்பட்ட மேம்பாடுகளால், மார்ச் மாதத் தவணையை முன்கூட்டியே வழங்க முடிந்தது என்று அந்த அறக்கட்டளை கூறியது.
அதேவேளை கல்வி உதவித்தொகை வழங்கும் செயல்முறையின் மேம்பட்ட செயல்திறனே, பயனாளிகளுக்கு முன்கூட்டியே பணம் வழங்க வழிவகுத்தது என MTF-இன் தலைவரும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியுமான விஜத் மலகொட கூறினார்.