நாடொன்றில் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் மார்பர்க் வைரஸ்
ஆப்பிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் மார்பர்க் வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை ஒன்பது பேர் இறந்துள்ளதாகவும் ஏராளமான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்பர்க் வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் எபோலா வைரஸின் அறிகுறிகளைப் போலவே இருக்கின்றன என கூறப்படுகிறது.
இதில் நோயாளிக்கு காய்ச்சல், நெஞ்சு வலி ஆகியவை காணப்படுகிறது. தொற்று தீவிரமடையும் போது, நிலைமை மோசமடைந்து, நோயாளி இறக்கு நிலை ஏற்படுகிறது.
மார்பர்க் வைரஸால் இவ்வளவு பெரிய அளவில் தொற்று பரவல் இருப்பது இதுவே முதல்முறை என்று WHO அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அவை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.
மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார துறையில் உள்ள அவசர கால நிபுணர்கள், தொற்று தடுப்பு குழுக்கள், ஆய்வகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆதரவு அமைப்புகளை பணியில் ஈடுபடுத்தி பரவலைத் தடுக்க WHO நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் மார்பர்க் வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய முடியும்.