கொழும்பு - காலி வீதியில் வழுக்கி விழுந்த பலர்!
கொழும்பு - காலி வீதியில் கல் தூள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு வீதியில் கல் தூள் கொட்டியதன் காரணமாக பலர் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகின்றது.
இன்று (23) அதிகாலை கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த லொறி ஒன்றிலிருந்தே இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளது.

இதனையடுத்து , கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வீதியின் களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கல் தூள் மீது பயணிப்பதற்கு முயற்சித்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
மேலும் பாதுகாப்பற்ற முறையிலும் கவனக்குறைவாகவும் கல் தூள் கொண்டு சென்ற குறித்த லொறி, களுத்துறை தெற்கு பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.