மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான படுவாங்கரைப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை-வீரமுனை பிரதான வீதி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.

வீதியின் புனரமைப்பு குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் நேரடி கள விஜயம் மேற்கொண்டு மதிப்பீடு செய்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கினால் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்ததனால் இவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரயாணிகள் இவ்வீதியை தற்காலிகமாக பயன்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் தெரிவிக்கின்றர்.

தற்போதைய நிலையில் குறித்த வீதியில் வெள்ளம் வடிந்துள்ளதனால் வீதியினூடாக மக்கள் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் எனவும், வீதி நிரந்தரமாக திருத்தியமைக்கும் பணி விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.