பெண்கள் பூச்சூடுவவதால் இத்தனை நன்மைகளா!
தமிழ் பெண்கள் பெரும்பாலும் பூக்கள் சூடும் வழக்கம் காணப்படும்.
பெண்கள் பூக்கள் சூடிகொள்வது பெண்மைக்கான ஹார்மோன்கள் சீராக சுரக்கக்கூடும் என்று கூறப்படும்.
நாளமில்லா சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் போன்றவை நன்றாக இயங்க வைக்கும் என்று கூறப்படுகிறது.
ரோஜா
ரோஜாவை இரண்டு நாட்கள் வரை சூடிகொள்ளலாம். ரோஜா பூவை சூடிகொள்வதால் தலைசுற்றல், கண் நோய் ஆகியவை சரியாகும்.
செண்பகப்பூ
இந்த பூவை சூடிகொள்வதன் மூலம் பார்வைத்திறன் மேம்பாடு அடையும். இந்த பூவை 15 நாட்கள் வரை சூடிகொள்ளலாம்.
மல்லிகைப்பூ
இதனை சூடிகொள்ளும் போது கண்களுக்கு குளீர்ச்சி தரும். தாம்பத்திய உறவின் போது கணவன் மனைவி இருவரது ஹார்மோன் சுரப்பும் தூண்டப்பட்டு கருவுறுதல் எளிதாக நடக்கும்.
தாழம்பூ
இந்த பூவை சூடிகொண்டால் சீரான தூக்கத்தை தரும்.உடல் சோர்வை நீக்கும். தாழம்பூவை அதன் வாசம் இருக்கும் வரை சூடிகொள்ளலாம்.