தமிழக முதலமைச்சரிடம் மனோ முன்வைத்த முக்கிய கோரிக்கை!
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக, கல்வியில் வாழ்வாதார உதவியை வழங்கும் வகையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரி ஆகியவற்றை நிர்மாணித்து தரவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் (M.K Stali ) நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) கோரியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் கல்வித் தரம் தொடர்ந்தும் மிகக் குறைவாகவே உள்ளது.
மேலும், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தில், இலங்கைத் தமிழர்கள் முழுமையான உரிமை கோர முடியாது என்றும், இந்திய வம்சாவளித் தமிழர்களும் அந்த அடையாளத்தின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே இந்தக் கல்லூரியை நிர்மாணிப்பதற்கும், பெருந்தோட்டங்களில் மலையக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க நிபுணர்களை அனுப்புவதற்கும் தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள முக்கியப் பல்கலைக்கழகங்களில் வளாகங்களை நிறுவுவதற்கு தமிழக அரசாங்கம் உதவவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.