ஒரு நிகழ்வுக்கு சென்றதால் எம்.பி மனோ கணேசனுக்கு எற்பட்ட சிக்கல்!
எமது கட்சி யாருடனும் சங்கமம் ஆகாது என நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
ஒரு சில ஊடகங்கள் குறிப்பிடுவதை போல் இலங்கை தொழிலாளர் காங்கிரசோடு தமிழ் முட்போக்கு கூட்டணி சங்கமம் என்று கூறுவத்தில் எவ்வித உண்மையும் கிடையாது. அவர்கள் கட்சி ரீதியாக ஒரு நிகழ்வுக்கு எம்மை அழைத்தார்கள் நாம் சென்று வந்தோம் அவ்வளவுதான்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு கட்சி. நாம் கூட்டணி. அது வேறு இது வேறு. இரண்டையும் இணைக்க கூடாது.
மலையக மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க நாம் ஒரு போதும் பின்னிக்க போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர அவர்களோடு நாமும் எம்மோடு அவர்களும் இணைந்து செயற்படுவது தவறு கிடையாது.
அதே நேரம் இரண்டு கட்சிகளும் சங்கமம் என்று கூறுவத்தில் எவ்வித உண்மையும் இல்லை. குழப்பமும் கிடையாது. நிகழ்வுக்கு வைப ரீதியாக எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நாம் கூட்டணி ரீதியாக சென்று வந்திருந்தோம். அவ்வளவுதான் அதை தவிர அந்த கட்சியும் இந்த கட்சியும் இணைந்து செயல்படுவதாக கூறுவதில் எவ்விதமான உண்மைகளும் கிடையாது என்றார்.