வீடு திரும்பினார் மனோ கணேசன்!
நாடளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கொரோ தொற்றுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில் ,
“எனக்கு ஆறுதல்கள், ஆலோசனைகள் தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கை யையும் நேரடியாகவும், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும், அதேபோல் எனக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கிய மருத்துவத் துறை நண்பர்களுக்கும் எனது இதயபூர்வ மான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்