தமிழர் பகுதியில் கோர விபத்து: இளம் தாய் வைத்தியசாலையில்!
மன்னார் மாவட்டம் - நானாட்டான் பகுதியில் உள்ள பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நானாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று (31-01-2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி ஆண் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் நாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி குழந்தை ஒன்றுடன் குறித்த இளம் தாய் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.
மேலும் விபத்தில் இளம் தாய் ஒருவர் காயமடைந்து நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த விபத்தில் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நானாட்டான் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.