பேரிடரிலும் அடங்காத மன்னார் போதைபொருள் வியாபாரிகள்!
மன்னார் பள்ளியமுனை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ஆறு கிலோ கிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் “போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, சோதனை நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போதையற்ற நாடு -ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்கை
எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி, கடந்த 10 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா, மன்னார் பிரிவு காவல்துறை குற்றப்பிரிவுடன் இணைந்து பள்ளியமுனை பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த சுமார் ஆறு கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கஞ்சா இருப்பின் மொத்த மதிப்பு 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.