ஹோட்டலில் இருந்த தம்பதியினருக்கு முகாமையாளர் செய்த செயல் ; தொலைபேசியில் காத்திருந்த அதிர்ச்சி
சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை ரகசியமாக வீடியோ எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அந்த ஹோட்டலின் முகாமையாளரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர கூடுதல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தொலைபேசியில் வீடியோ
குறித்த தம்பதியினரின் ஆன்லைன் மூலமாக இந்த ஹோட்டலில் அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கியிருந்துள்ளனர். இதன் போது அறையிலிருந்த சிறிய துளையிலிருந்து ஒரு ஒளி வருவதைக் கண்டுள்ளனர்.
பின்னர், இது குறித்து விசாரித்தபோது, சந்தேக நபர் அவர்களை கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் பகீர் பின்னனி ; மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த ஈவிரக்கமற்ற தந்தை
இச் சம்பவம் குறித்து தம்பதியர் பொலிஸில் முறைபாடு பதிவு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையில் அங்கு சென்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.பொலிஸார் அங்கு சென்று சந்தேக நபரின் இரண்டு கையடக்க தொலைபேசிகளை ஆய்வு செய்தபோது, அவற்றில் தவறான காணொளிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் படி பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.