பெண்களை துரத்தி துரத்தி முத்தமிட்ட வயோதிபர்; சிக்கவைத்த சிறுமி; தண்டனையிலிருந்து தப்பிக்க என்ன செய்தார் தெரியுமா?
ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது ‛சீரியல் கிஸ்சர்’ இற்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் விசித்திரமான தண்டனை ஒன்றை வழங்கி உள்ளது.
பொதுவெளியில் பெண்களை குறிவைத்து முத்தமிட்டு குறித்த நபர் முத்தமிட்டுபாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
சீரியல் கிஸ்சர்
இந்த ‛சீரியல் கிஸ்சர்’ தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்காட்லாந்தின் தலைநகராக எடின்பர்க் உள்ளது. இங்கு வசித்து வருபவர் மிர்சா முகமது சயீத் (வயது 64). இவர் திருமணம் முடிந்தவர்.
5 குழந்தைகளின் தந்தையான மிர்சா முகமது சயீத்துக்கு விசித்திரமான பழக்கம் ஒன்று இருந்துள்ளது. அதாவது பொதுவெளியில் பெண்களை ஏமாற்றி முத்தமிடுவது தான்.
தனது செல்போனுடன் அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி செல்வார். அப்போது அவர் அங்கு தனியாக வரும் பெண்களிடம் தனது செல்போனை கொடுத்து போட்டோ எடுத்து தரும்படி உதவி கேட்பார்.
அந்த பெண்களும் அவருக்கு போட்டோ எடுத்து கொடுப்பார்கள். பெண்களிடம் தனது செல்போனை திரும்ப பெறும் மிர்சா முகமது சயீத் அவர்களின் உதட்டில் முத்தமிட்டு ஓடிவிடுவார்.
சிக்கவைத்த 16 வயது சிறுமி
இவரது லீலை நீண்டுகொண்டிருந்த நிலையில் 16 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். 2021ல் பெண் ஒருவருக்கு முத்தமிட முயன்றபோது மிர்சா முகமது சயீத்தை அவர் சரமாரியாக தாக்கி பொலிசில் சிக்க வைத்தார்.
மேலும் மிர்சா முகமது சயீத் மீது ஏராளமான புகார்கள் போலீசுக்கு சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மிர்சா முகமது சயீத் குற்றங்களுக்காக அவருக்கு சிறை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க , தனது தவறை உணர்ந்த அவர் பொதுவெளியில் நடமாடாமல் வீட்டு காவலில் இருப்பதாகவும், சமூக பணியில் ஈடுபடுவதாகவும், சம்பளம் இன்றி வேலை செய்வதாகவும் தெரிவித்தார்.
இதற்கு நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட நிலையில் ‛சீரியல் கிஸ்சர்’ மிர்சா முகமது சயீத் சிறை தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.