காவல் நிலையத்தில் தன் உடலுக்கு தானே தீ வைத்து கொண்ட நபர்
மிரிஹான தலைமை காவல்நிலையத்தினுள் தனது உடலுக்கு தீ வைத்து மனைவியை கட்டியணைக்க முயன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அந் நபர் தொடர்ந்தும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
குறித்த நபரினால் தனது மனைவிக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக நேற்று வருகை தந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ வைப்பு
மிரிஹான காவற்துறையின் பலவின முறைப்பாடுகள் பிரிவில் சந்தேகநபர் லைட்டரை பற்றவைத்து தனது உடலுக்கு தீ வைத்துக்கொண்டு அருகில் இருந்த மனைவியை கட்டியணைக்க முயன்றுள்ளார்.
எனினும் மனைவி வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினர் தீ வைத்துக்கொண்ட நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன்போது அவரது உடையில் பெட்ரோல் வாசனை வீசியதாகவும் 34 வயதான குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.