யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் வத்தளையில் கைது
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேச மக்களை பயமுறுத்தி, இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை தாக்கச் சென்ற போது வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்யும் போது யாழ்.பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதியை தாக்கி காயங்களுக்குள்ளாக்கியதாகவும், காயமடைந்த அதிகாரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரால் திருடப்பட்ட சுமார் 50 பவுண் தங்கம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்