சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது !
பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கொடதெனியாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெலிகஸ்வத்த பகுதியில், சட்ட விரோத மதுபானம் மற்றும் கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடதெனியாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று (06) கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொடதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடம் இருந்து, 67 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் (90 போத்தல்கள்) மற்றும் 1215 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை கொடதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.