மனைவியுடன் சிவனொளிபாத யாத்திரைக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்
சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற நபரொருவர் சீத கங்குள ஓயாவிலிருந்து இன்று (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பசறை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவர் தனது மனைவி மற்றும் நண்பர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.
நல்லதண்ணி பொலிஸாருக்கு தகவல்
பின்னர், அவர் தனது மனைவியுடன் சீத கங்குள ஓயாவிற்கு நீராடச் சென்றபோது, அப்பகுதியில் ஏராளமான பெண்கள் நீராடிக்கொண்டிருந்ததால் , அவர் தனது மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, வேறு ஒரு பகுதிக்கு நீராடிச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் தனது கணவன் திரும்பி வராததால், மனைவி இது தொடர்பில் நல்லதண்ணி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் அவரது சடலத்தை சீத கங்குள ஓயாவிலிருந்து மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.