வவுனியாவிற்கு சொகுசு பேருந்தில் பயணித்த தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்
கொழும்பு வவுனியா சொகுசு பேருந்தில் பயணம் செய்த குடும்பஸ்தர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ள சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று (22) அதிகாலை கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்தில் குறித்த நபர் பயணம் செய்துள்ளார்.

விசாரணைகள்
இதன்போது பேருந்து வவுனியாவை அடைந்த நிலையில் அவரது நிலை தொடர்பாக சந்தேகம் அடைந்த பேருந்து நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் பேருந்தை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மட்டக்களப்பு கல்முனை பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நபரே மரணமடைந்துள்ளார். அவர் புத்தளம் பகுதியில் இருந்து குறித்த பேருந்தில் ஏறியதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.