சொகுசுப் பேருந்தில் நடந்த பகீர் சம்பவம்; மாடுகளுடன் பிடிபட்ட நபர்!
கொழும்பு சொகுசுப் பேருந்தில் மாடுகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்து உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் இன்று ஹெட்டிப்பொல நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பிங்கிரியவிலிருந்து கொழும்புக்கு அலுவலகப் பணியாளர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிங்கிரிய பகுதியிலிருந்து மாடுகள் ஏற்றப்பட்டு, ஆனமடுவ - பல்லமப் பகுதியில் விற்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்