தமிழர் பகுதியொன்றில் பெருமளவு ஆபத்தான பொருளுடன் சிக்கிய நபர்
மன்னார் - உயிலங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில், வட மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பாரியளவு கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (09) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 07 கிலோகிராம் 320 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியாவை சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உயிலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.