கமரா உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டில் நபர் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் 500,000.பெறுமதியான கமரா உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (02) ஊடக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சில ஒளிபரப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கமரா உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று சேரம்பத்கொடுவ பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெய்யந்தர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் திருடப்பட்ட உபகரணங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.