நிவாரண பணிகளுக்கு இடையூறு விளைவித்தவர் கைது ; காணொளி வெளியிட்டவர் தலைமறைவு
நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் போது, முறையற்ற வகையில் நடந்து கொண்ட ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதன்படி, இந்த சம்பவம் கடந்த 04ஆம் திகதி, சேருநுவர - அரியமன்கேணி கிராம அலுவலகர் பிரிவின் கிராம அலுவலகர் மற்றும் ஒரு தன்னார்வ அமைப்பு இணைந்து லிங்கபுரம் பகுதியில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் கிராம அலுவலர்களை திட்டி, அவரது கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, நிவாரண விநியோகத்தை சீர்குலைத்தனர்.

அலுவலர்களை திட்டி கடமைகளுக்கு இடையூறு
இதனை தொடர்ந்து, குறித்த கிராம அலுவலகர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். அதன்படி, சேருநுவர பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு கடந்த 04ஆம் திகதி, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்தது.
சம்பவ இடத்தில் இருந்த ஒருவர், பொலிஸ் அதிகாரிகளை திட்டி, சம்பவத்தை தொலைபேசியில் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். காணொளியை வெளியிட்ட நபர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
பொலிஸ் கடமைகளைச் செய்வதில் குற்றவியல் வற்புறுத்தலுக்காக, சேருநுவர பொலிஸார் குறித்த நபர் மீது மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
சந்தேகநபர் தற்போது அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.