இலங்கையர் பிரியந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பேராயர்!
பாகிஸ்தானில் எரித்து படுகொலை செய்யபட்ட பிரியந்த குமாரவின் பூதவுடலுக்கு கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் Sialkot நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், பிரியந்த குமாரவின் சடலம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2.5 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ளதாகவும், அவரது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பவுள்ளதாகவும் பிரதமர் இம்ரான்கான் (imran Khan) அறிவித்துள்ளார்.