மாளவ்ய யோகம்; அதிஸ்ட மழையில் நனையப் போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்
ஜோதிடத்தில் உருவாகக்கூடிய யோகங்கள் நமக்கு வாழ்க்கையில் முற்றிலுமான ஒரு முன்னேற்றத்தை கொடுக்கிறது. அவற்றின் மிகவும் சிறப்பான மற்றும் முக்கியமான யோகம் தான் மாளவ்ய யோகம்.
சுக்கிர பகவான் அவருடைய ஆட்சி அல்லது உச்ச ராசியில் இருந்து கேந்திர ஸ்தானங்களில் அமரும்போது உருவாகும் இந்த யோகம் ஒருவருக்கு, அழகு, சமுதாயத்தில் புகழ், செல்வம், சொத்து சேர்க்கை, ஆடம்பரம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றை கொடுக்கிறது.

கோடீஸ்வர யோகம்
இந்த வகையில், இந்த யோகத்தால் ஒரு சில ராசியினருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றமும் திடீர் மாற்றமும் கிடைக்கப்போகிறது.
துலாம்: இவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடப்போகிறார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றக் கிடைக்கும். நீண்ட நாட்கள் தடைபட்ட பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். புதிய நட்புக்களின் அறிமுகம் தொழில் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து மோதல் விலகும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்: இந்த காலகட்டங்களில் உங்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க ரீதியாக நல்ல பலன்களை பெறுவீர்கள். சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தையும் அந்தஸ்தையும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். வீடுகளில் பொன், பொருள் சேர்க்கை மற்றும் வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
யாழில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் ; TIN இலக்கம் பெறவுள்ளோருக்கு அரசாங்க அதிபரின் முக்கிய தகவல்
ரிஷபம்: இந்த காலகட்டங்களில் நீங்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. நீண்ட நாட்கள் வீடு வாங்க வேண்டும் என்று எதிர் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.