இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்!
மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே மலேரியாவால் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஏப்ரல் 10 ஆம் திகதி அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார்.
மலேரியா பாதிப்பு
அதன் பின்னர் ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 15 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களை பரிசோதிப்பதற்கான சரியான பரிசோதனை திட்டம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இதுவாகும்.