உங்கள் வீட்டில் கஷ்டங்கள் மேலும் தொடர்கின்றதா அப்போ இந்த தவறை செய்யாதீர்கள்
பெரும்பாலும் வீட்டில் நாம் பெரிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் எதையும் செய்யவில்லை என்றாலும், தினமும் விளக்கு ஏற்றுவது வார வாரம் பூஜை செய்வது இப்படியான சில விஷயங்களை நாம் செய்வது வழக்கம்.
அப்படியெல்லாம் செய்தும் கூட வீட்டில் நிம்மதி இல்லாமல் கஷ்டங்கள் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு செய்யும் சில தவறுகள் கூட காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் செய்ய கூடாதவை
நாம் வீட்டில் பூஜை செய்யும் நாட்களில் பூஜை முடித்த பிறகு கண்டிப்பாக பிறர் வீட்டுக்கு செல்லக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாகவே அடுத்தவர் வீட்டிற்கு சென்று தேவையில்லாத பேச்சுக்களை பேசுவதை தவிர்ப்பது நல்லது.
அடுத்தவர் வீட்டிற்கு செல்லுதல்
அது மட்டும் அன்றி வீட்டில் பூஜை நாட்களில் அல்லது விசேஷ நாட்கள் வழிபாடு செய்யும் நாட்களில் அடுத்தவர் வீடுகளுக்கு சென்று நாம் அமர்ந்து பேசும் போது நம் பூஜை செய்த பலன் குறைவதோடு நம் வீட்டின் நல்ல அதிர்வலைகள் எல்லாம் சென்று அங்கு இருக்கும் தேவை இல்லாத எதிர்மறை ஆற்றல்கள் நம்மை தொடரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த தவறை ஆண், பெண் இருவருமே தவிர்க்க வேண்டிய ஒன்று
இப்படி அடுத்தவர் இல்லங்களுக்கு சென்று பேசுவது என்பது இறைவழிபாட்டின் சக்தியை குறைப்பதோடு நாம் பேசும் சில தேவையில்லாத பேச்சுக்களே நமக்கு துன்பத்தைத் தேடி தரும் என்றும் சொல்லப்படுகிறது.
குறை சொல்லுதல்
அதாவது நாம் அடுத்தவர் வீட்டிற்கு சென்று அங்கு இருக்கும் ஒரு பொருளை பற்றியோ அல்லது அவர்கள் அணிந்திருக்கும் நகையை பற்றியோ அல்லது அவர்கள் வீட்டில் இருக்கும் ஏதோ ஒன்றை பார்த்து வீட்டில் ஏன் இதை இப்படி வைத்திருக்கிறீர்கள், இந்த நகை நன்றாக இல்லை, இந்த பொருளை இங்கு வைக்க கூடாது. இது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நாம் சென்றிருக்கும் வீட்டில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நல்லபடியாக அவர்கள் மனம் நோகாதபடி எடுத்துச் சொல்ல வேண்டும்.
அவர்கள் மனதை துன்புறுத்தும் போது நமக்கான நல்ல அதிர்வலைகள் குறைய தொடங்கி விடும்.
மற்றவர் துன்பப்படும் செயல்களை செய்தால் அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொள்ள தான் வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள், ஆண்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் இந்த குணத்தை தவிர்த்தாலே வீட்டில் செய்யும் பூஜைக்கான பலன்கள் முழுவதுமாக கிடைத்து விடும், வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.