இலங்கையின் பல உயர் பதவிகளில் விரைவில் மாற்றம்
பல சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் இடமாற்றம் பெற உள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
பொலிஸ் நிர்வாகம், குற்றம் மற்றும் போக்குவரத்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி துறைகள், ஊவா மாகாணம், மேல் மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளிட்ட பல மாகாணங்களில் புதிய அதிபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பரிந்துரைகள்
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைகள் அடுத்த சில நாட்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், இது தொடர்பாக இதுவரை எந்த பரிந்துரைகளும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவில்லை என்றும், அடுத்த சில நாட்களில் அவை பெறப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தேசிய பொலிஸ் ஆணைககுழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் சமர்ப்பித்த பரிந்துரைகள் அடுத்த வியாழக்கிழமை கூட்டத்துக்குப் பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.