பாரசீக வளைகுடாவில் பெரும் எண்ணெய்க் கசிவு
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நீடித்து வரும் மோதல்கள் காரணமாகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் கடலில் பெரும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் கெஷ்ம் மற்றும் சிரி தீவுகளுக்கு அருகே செயற்கைக்கோள் படங்களின் மூலம் இரு பெரிய எண்ணெய் படலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
லைபீரியக் கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே கெஷ்ம் தீவு அருகே ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மீட்புப் பணி
மற்றொருபுறம் ஓமன் கடற்பகுதியில் ரஷ்ய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற கப்பல் தரைதட்டி சுமார் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எண்ணெய் பரவியுள்ளதால் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளன.

தற்போதைய போர்ப் பதற்றம் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.