மைத்திரி வாழ்வது அரேபிய சுல்தான் வாழ்க்கை; உண்மையை போட்டுடைத்த பொன்சேகா!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணம் இல்லை என கதை அளக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உண்மையில் சொல்லப்போனால் அவர் வாழ்வது அரேபிய சுல்தான் வாழ்க்கை என்றும் பொன்சேகா குறிப்பிட்டார்.
மைத்திரி நாடகம்
அதுமட்டுமல்லாது மைத்திரியின் பிள்ளைகள் வாழ்வதும் அப்படித்தான் என கூறிய பொன்சேகா, கொழும்பில் வீடு, பொலன்னறுவையில் வீடு மற்றும் வாகனங்கள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதைவிடுத்து மைத்திரி பணம் இல்லை என பொய்யான கதை கூறுவதாக தெரிவித்த பொன்சேகா, வீடுகள் இரண்டில் ஒன்றை ஏலம் இட்டாலே குறித்த பணம் கிடைக்கும் என்றும் கூறினார்.
அதுமட்டுமல்லாது மைத்திருக்கு ஒரு சகோதரர் இருக்கின்றார் என்றும், அவருக்கு 24 மணித்தியாலத்தில் அதனை கட்டி முடிக்கலாம். அதைவிட்டு காசு முட்டி பணம், பிச்சை எடுத்தல் என்று மைத்திரி நாடகம் ஆடுவதாகவும் பொன்சேகா சாடினார்.
மேலும் பிச்சை எடுப்பது என்பதும் சிறையில் அடைக்கக்கூடிய ஒரு தவறு தான் என சுட்டிக்காட்டிய பொன்சேகா, அடுத்த முறை பிச்சை எடுத்த குற்றச்சாட்டில் தான் அவர் சிறை செல்வார் என்று கூறியுள்ளார்.