கைமாறும் மஹிந்தானந்த அறக்கட்டளை சொத்துக்கள்
மஹிந்தானந்த அறக்கட்டளையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுமார் 20 வருடங்களாக குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வந்த மஹிந்தானந்த அறக்கட்டளை ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் இயங்கி வந்த மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனைச் சூழவுள்ள நிலப்பகுதியை ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று (02) காலை ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த கட்டிடங்கள் மற்றும் காணியை மீள ஒப்படைக்கும் நடவடிக்கையை மஹிந்தானந்த அறக்கட்டளையின் செயலாளர் சாமிக தர்மதிலக மேற்கொண்டார்.
அதே சமயம் எதிர்காலத்தில் இந்த நிலத்தை மக்களுக்குப் பயனுள்ள வகையில் பொதுச் சந்தை நிலமாகவும், ஏனைய நிறுவனங்களின் பயன்பாட்டிற்காகவும் வழங்க எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.